கிரிக்கெட்

12வது ஐ.பி.எல். போட்டி; சேப்பாக்கம் மைதானத்தின் முன் குவிந்த ரசிகர்கள் + "||" + 12th IPL Competition; Fans gathered at the Chepauk Stadium

12வது ஐ.பி.எல். போட்டி; சேப்பாக்கம் மைதானத்தின் முன் குவிந்த ரசிகர்கள்

12வது ஐ.பி.எல். போட்டி; சேப்பாக்கம் மைதானத்தின் முன் குவிந்த ரசிகர்கள்
12வது ஐ.பி.எல். போட்டியை காணும் ஆவலில் சேப்பாக்கம் மைதானத்தின் முன் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
சென்னை,

12வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி மே 2வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

தொடக்க லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று போட்டியில் இறங்குகின்றன.

இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.  போட்டியை காண ரசிகர்கள் 5.30 மணியளவில் இருந்து உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.  பெருமளவிலான கிரிக்கெட் ரசிக ரசிகைககள் தங்களது கைகளில் டிக்கெட்டுகளுடன் மைதானத்திற்கு வெளியே வெற்றி சின்னம் காட்டியபடியும், செல்பி எடுத்தபடியும், முகத்தில் தங்களது விருப்ப கிரிக்கெட் வீரரின் பெயரை வர்ணம் பூசியபடியும், வீரரின் பெயரிடப்பட்ட பனியனை அணிந்தபடியும், போட்டியை காணும் ஆவலிலும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆபாசமாக பேசிய ரசிகர்களை சாடிய நிவேதா தாமஸ்
ஆபாசமாக பேசிய ரசிகர்களை நடிகை நிவேதா தாமஸ் சாடியுள்ளார்.
2. ஐ.பி.எல். போட்டியில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க புதிய முறை அமல்?
ஐ.பி.எல். போட்டியில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது.
3. சுற்றி வளைத்து ‘செல்பி’: ரசிகர்களிடம் இருந்து தப்பி ஓடிய மலைக்கா
சுற்றி வளைத்து செல்பி எடுத்த ரசிகர்களிடம் இருந்து நடிகை மலைக்கா தப்பி ஓடினார்.