கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் 5,000 ரன்கள் குவித்து சுரேஷ் ரெய்னா அபார சாதனை + "||" + In the IPL series Suresh Raina scored 5000 runs

ஐபிஎல் தொடரில் 5,000 ரன்கள் குவித்து சுரேஷ் ரெய்னா அபார சாதனை

ஐபிஎல் தொடரில் 5,000 ரன்கள் குவித்து சுரேஷ் ரெய்னா அபார சாதனை
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் 5,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற அபார சாதனையை படைத்துள்ளார்.
ஐபிஎல் 12-ஆவது சீசனுக்கான முதல் போட்டி நேற்று (ஏப்.23) சனிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில்,  நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 70 ரன்களுக்குள் சுருண்டது. இதையடுத்து ஆடிய சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் சுரேஷ் ரெய்னா 19 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில், இந்த போட்டியின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 5,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற அபார சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா படைத்துள்ளார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.