கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி + "||" + IPL cricket competition Kolkata won by 6 wickets

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
கொல்கத்தாவில் இன்று நடைப்பெற்ற 2-வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியில் அதிராடியாக விளையாடிய டேவிட் வார்னர் 53 பந்துகளில் 85 ரன்கள் விளாசினார். பின்னர் களமிறங்கிய விஜய் சங்கர் 40 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 39 ரன்களும் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து, 182 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்கள் மட்டுமே இழந்து, இலக்கை எட்டி வெற்றிப்பெற்றது. இதில் அதிரடியாக விளையாடிய ரஸ்செல் 19 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார்., நிதிஷ் ராணா 47 பந்துகளில் 68 ரன்களும், ராபின் உத்தப்பா 35 ரன்களும் எடுத்தனர்.