கிரிக்கெட்

‘‘எப்படி இருக்கீங்க; நல்லா இருக்கேன்” - இணையத்தில் வைரலாகும் தோனி மகள் பேச்சு + "||" + MS Dhoni gives language lessons to daughter Ziva ahead of CSK's clash with DC

‘‘எப்படி இருக்கீங்க; நல்லா இருக்கேன்” - இணையத்தில் வைரலாகும் தோனி மகள் பேச்சு

‘‘எப்படி இருக்கீங்க; நல்லா இருக்கேன்” - இணையத்தில் வைரலாகும் தோனி மகள் பேச்சு
‘‘எப்படி இருக்கீங்க; நல்லா இருக்கேன்” என தோனி மகள் தமிழில் பேசும் பேச்சு இணையத்தில் வைரலாகி உள்ளது.
ஐ.பி.எல். வந்துவிட்டாலே தோனி வைரலாவதைவிட அவரது மகள் ஸிவா அதிகம்  வைரலாவார். ஸிவா எது செய்தாலும் அது வீடியோவாக வெளிவந்து செம வைரலாகும். தோனியை பின்தொடருபவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ அதற்கு இணையாக ஸிவாவுக்கும் சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருபவர்கள்  இருக்கிறார்கள்.

கடந்த ஐ.பி.எல். தொடரில் அப்படிதான் ஸிவா என்ன செய்தாலும் வீடியோவாக வெளியாகி செம வைரலானது. இந்த வருடமும் அது தொடங்கியுள்ளது. தோனி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஸிவாவின் வீடியோ நேற்று சமூக வலைதளம் முழுவதும் வைரலாகியுள்ளது.

‘எப்படி இருக்கீங்க’ என்று தோனி ஆறு மொழிகளில் கேட்கிறார். அதற்கு ஏற்றார்போல ஸிவா அந்தந்த மொழிகளில் பதில் சொல்கிறார். தமிழில்  ‘எப்படி இருக்கீங்க’ என்று தோனி கேட்க அதற்கு ஸிவா,  ‘நல்லா இருக்கேன்’ என்று தன்னுடைய மழலை மொழியில் பதில் சொல்கிறார்.

அடுத்து வங்காளம், குஜராத்தி, போஜ்புரி, பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் எப்படி இருக்கீங்க என்று தோனி கேட்க, ஸிவா தகுந்த மொழிகளில் பதிலளித்தார். இறுதியாக தோனி  ‘இன்ஷா அல்லாஹ்’ என்று சொல்ல  ‘மாஷா அல்லாஹ்’ என்று ஸிவா பதிலளித்தார். தற்போது இந்த வீடியோவை தோனி அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யபட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தோனிக்கு உதவி பண்ணுங்கப்பா...சென்னை IIT செமஸ்டர் தேர்வில் டோனி குறித்து கேள்வி
சென்னை IIT செமஸ்டர் தேர்வில் டோனி குறித்து கேள்வி கேட்கப்பட்டு உள்ளது.
2. ”தல” என்றே அழைக்கிறார்கள் : சி.எஸ்.கே ரசிகர்கள் குறித்து டோனி உருக்கம்
”தல” என்றே அழைக்கிறார்கள் என்று சி.எஸ்.கே. ரசிகர்கள் குறித்து டோனி உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
3. ‘டோனி பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்’ - பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி கருத்து
‘டோனி எங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்’ என்று பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
4. விமான நிலையத்தில் தூங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஐபிஎல் டைமிங்கை சூசகமாக சுட்டிக் காட்டிய டோனி
ஐபிஎல் டைமிங்கை சூசகமாக சுட்டிக் காட்டி டோனி தான் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் டோனி.
5. காத்திருந்த மும்பை பாட்டியுடன் செல்பி எடுத்துக் கொண்ட டோனி வைரலாகும் வீடியோ
காத்திருந்த மும்பை பாட்டியுடன் செல்பி எடுத்துக் கொண்ட டோனி வீடியோ வைரலாகி உள்ளது.