கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்கு + "||" + IPL Cricket: Chennai scored 148 runs to win

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்கு

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
புதுடெல்லி, 

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 

இந்த போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. 

டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 51 ரன்களும், ரிஷப் பாண்ட் 25 ரன்களும், பிரித்வி ஷா 24 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக பிராவோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதன்படி சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.