கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம் + "||" + In IPL cricket Today's game

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்தது.

கொல்கத்தா, 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்– கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இடம்: கொல்கத்தா, நேரம்: இரவு 8 மணி

தினேஷ் கார்த்திக் கேப்டன் அஸ்வின்

நட்சத்திர வீரர்கள்

ஆந்த்ரே ரஸ்செல், உத்தப்பா, நிதிஷ் ராணா, சுப்மான் கில், குல்தீப் யாதவ், சுனில் நரின்.

***

கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், சர்ப்ராஸ் கான், முகமது ‌ஷமி, முஜீப் ரகுமான்.

இதுவரை நேருக்கு நேர் 23

15 வெற்றி 8 வெற்றி

ஐ.பி.எல்.–ல் சிறந்த செயல்பாடு

2012, 2014–ல் சாம்பியன் 2014–ல் 2–வது இடம்

2–வது வெற்றியை பெறப்போவது யார்?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்தது. இதில் 182 ரன்கள் இலக்கை நோக்கி தடுமாற்றத்துடன் விளையாடிய கொல்கத்தா அணிக்கு கடைசி கட்டத்தில் ஆல்–ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 49 ரன்கள் விளாசி வெற்றியை தேடித்தந்தார். உள்ளூர் ரசிகர்களின் உற்சாகம் அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமையும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது முதல் ஆட்டத்தில் கிறிஸ் கெய்லின் (8 பவுண்டரி, 4 சிக்சருடன் 79 ரன்) அதிரடி ஜாலத்தால் 14 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் செய்த ‘மன்கட் ரன்–அவுட்’ பெரிய அளவில் விவாதத்திற்கு உள்ளானது. இருப்பினும் சர்ச்சைகளை ஓரங்கட்டி விட்டு அடுத்த அதிரடிக்கு பஞ்சாப் அணி தயாராகி உள்ளது.

இரு அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களும், ‘சரவெடி’ பேட்ஸ்மேன்களும் அங்கம் வகிப்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் இன்னொரு விசே‌ஷம் என்னவென்றால் இரு அணிகளுக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கேப்டன்களாக இருக்கிறார்கள். 2–வது வெற்றி கிடைக்கப்போவது யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)