கிரிக்கெட்

டோனியை உற்காசப்படுத்திய மகள் ஸிவா..! + "||" + Go Papa: Ziva Dhoni leads the cheer for MS Dhoni as CSK battle Delhi Capitals

டோனியை உற்காசப்படுத்திய மகள் ஸிவா..!

டோனியை உற்காசப்படுத்திய மகள் ஸிவா..!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது டோனியை அவரது மகள் ஸிவா உற்சாகப்படுத்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் அடித்து வருகிறது.
புதுடெல்லி,

டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 147 ரன்களைக் குவித்தது. பின்னர் 148 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட களமிறங்கிய சென்னை அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பெங்களூரு அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி பேட்டிங் செய்யவில்லை. நேற்றைய போட்டியின் மூலம் இந்தாண்டு ஐபிஎல் போட்டிக்கான தனது பேட்டிங்கை டோனி தொடங்கினார். மைதானத்தில் பேட்டுடன் களம் இறங்கிய டோனியை ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். 

டோனியை ரசிகர்கள் பலரும் குரலெழுப்பி ஊக்கப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் மறுபக்கம் டோனியின் மகளான ஸிவாவும் தனது அப்பாவை ஊக்கப்படுத்தினார். கூட்டத்தோடு கூட்டமாக அப்பா... அப்பா....என்று ஹிந்தியில் கூறி தனது ஆரவாரத்தை வெளிப்படுத்தினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது