கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு + "||" + IPL Cricket Match Punjab won the toss and elected to bowl

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
கொல்கத்தா, 

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கான இடையேயான 6-வது லீக் போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 23 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 15 வெற்றியும்,  பஞ்சாப் அணி 8 வெற்றியும் பெற்றுள்ளன. மேலும் இருஅணிகளும் இத்தொடரின் முதல் போட்டியில் வெற்றிப்பெற்றுள்ளன. எனவே 2-வது வெற்றியை பெற இருஅணிகளும் கடுமையாக போட்டியிடும் என்பதில் சந்தேகமில்லை.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நட்சத்திர வீரர்கள்:-

ஆந்த்ரே ரஸ்செல், உத்தப்பா, நிதிஷ் ராணா, சுப்மான் கில், குல்தீப் யாதவ், சுனில் நாரைன்.

அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் நட்சத்திர வீரர்கள்:-

கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், சர்ப்ராஸ் கான், முகமது ‌ஷமி, முஜீப் ரகுமான்.