‘ஹாட்ரிக்’ சதத்தை நழுவ விட்டார், ஆரோன் பிஞ்ச்


‘ஹாட்ரிக்’ சதத்தை நழுவ விட்டார், ஆரோன் பிஞ்ச்
x
தினத்தந்தி 27 March 2019 9:30 PM GMT (Updated: 27 March 2019 7:23 PM GMT)

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது.

ளுஅபுதாபி, 

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 90 ரன்கள் (136 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து கேட்ச் ஆனார். முதல் 2 ஆட்டங்களில் சதம் அடித்திருந்த ஆரோன் பிஞ்ச், இந்த ஆட்டத்திலும் மூன்று இலக்கத்தை தொட்டிருந்தால் ஒரு நாள் கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை பெற்றிருப்பார். மயிரிழையில் அந்த பொன்னான வாய்ப்பை நழுவ விட்டு விட்டார்.

பின்னர் 267 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி ஆடியது. அந்த அணி 6.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 16 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.


Next Story