கிரிக்கெட்

சென்னை அணியில் இருந்து டேவிட் வில்லி விலகல் + "||" + From Chennai team David Willie's distortion

சென்னை அணியில் இருந்து டேவிட் வில்லி விலகல்

சென்னை அணியில் இருந்து டேவிட் வில்லி விலகல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் 29 வயதான டேவிட் வில்லி இடம் பெற்றிருந்தார்.

சென்னை, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் 29 வயதான டேவிட் வில்லி இடம் பெற்றிருந்தார். அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் அவர் அணியுடன் இணைவது தாமதம் ஆகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் குடும்ப வி‌ஷயம் காரணமாக இந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அவர் நேற்று அறிவித்தார். ஏற்கனவே காயத்தால் நிகிடி ஆட முடியாத நிலையில், சென்னை அணிக்கு இன்னொரு பின்னடைவாக டேவிட் வில்லியும் விலகி இருக்கிறார்.