பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 277 ரன்கள் குவிப்பு


பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 277 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 29 March 2019 9:30 PM GMT (Updated: 29 March 2019 9:07 PM GMT)

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று நடந்தது.

துபாய், 

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று நடந்தது. பாகிஸ்தான் கேப்டன் சோயிப் மாலிக் காயத்தால் ஆடவில்லை. அவருக்கு பதிலாக இமாத் வாசிம் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. சதத்தை நழுவ விட்ட மேக்ஸ்வெல் 98 ரன்களில் (82 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்–அவுட் ஆனார். மேக்ஸ்வெல் 90 முதல் 99 ரன்களில் விக்கெட்டை பறிகொடுப்பது இது 5–வது முறையாகும். உஸ்மான் கவாஜா 62 ரன்களும், அலெக்ஸ் காரி 55 ரன்களும், கேப்டன் ஆரோன் பிஞ்ச் 39 ரன்களும் எடுத்தனர். பின்னர் 278 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி ஆடியது.


Next Story