ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்
x
தினத்தந்தி 29 March 2019 9:15 PM GMT (Updated: 29 March 2019 9:12 PM GMT)

தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானை தோற்கடித்த பஞ்சாப் அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியை தழுவியது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்–மும்பை இந்தியன்ஸ்

இடம்: மொகாலி, நேரம்: மாலை 4 மணி

அஸ்வின் கேப்டன் ரோகித் சர்மா

நட்சத்திர வீரர்கள்

மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், டேவிட் மில்லர், முகமது ‌ஷமி

பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, யுவராஜ்சிங், குயின்டான் டி காக், மலிங்கா

இதுவரை நேருக்கு நேர் 22

10 வெற்றி 12 வெற்றி

மும்பையை சமாளிக்குமா பஞ்சாப்?

தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானை தோற்கடித்த பஞ்சாப் அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியை தழுவியது. இவ்விரு ஆட்டங்களிலும் பஞ்சாப் அணி சர்ச்சையில் சிக்கியது. ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ரன்–அவுட் செய்தது சர்வதேச அளவில் விவாதத்திற்கு உள்ளானது. இதே போல் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் உள்வட்டத்திற்குள் குறைவான பீல்டர்களை நிறுத்தி பஞ்சாப் அணி விதியை மீறியதால் அந்த சமயத்தில் அவுட் ஆன ஆந்த்ரே ரஸ்செல் தப்பியதோடு ஆட்டத்தின் போக்கையும் மாற்றிக் காட்டினார். இது போன்ற சலசலப்புகளை மறந்து விட்டு தற்போது உள்ளூர் சூழலில் வெற்றிக்கொடி நாட்டுவதில் முனைப்பு காட்டி வருகிறது. அந்த அணிக்கு கிறிஸ் கெய்ல் தான் ஆணிவேராக இருக்கிறார். அதிரடி அதிரடியை பார்க்க உள்ளூர் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒரு வெற்றி (பெங்களூருவுக்கு எதிராக), ஒரு தோல்வி (டெல்லிக்கு எதிராக) என்று 2 புள்ளியுடன் உள்ளது. முந்தைய ஆட்டத்தில் கிடைத்த வெற்றி மும்பை அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. பும்ரா, மலிங்காவின் வேகத்தாக்குதல் அந்த அணியின் பந்து வீச்சை வலுப்படுத்துகிறது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, குயின்டான் டி காக், ஹர்திக் பாண்ட்யா, யுவராஜ்சிங் உள்ளிட்டோர் மிரட்டுகிறார்கள். பலம் பொருந்திய அணிகளாக மல்லுகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல்பறக்கும் என்று நம்பலாம்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்– கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இடம்: டெல்லி, நேரம்: இரவு 8 மணி

ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன் தினேஷ் கார்த்திக்

நட்சத்திர வீரர்கள்

ரிஷாப் பான்ட், ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரபடா, அக்‌ஷர் பட்டேல்

ஆந்த்ரே ரஸ்செல், சுனில் நரின், உத்தப்பா, நிதிஷ் ராணா, சுப்மான் கில்

இதுவரை நேருக்கு நேர் 21

8 வெற்றி 13 வெற்றி

‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி கொல்கத்தா

தனது முதல் 2 ஆட்டங்களில் ஐதராபாத், பஞ்சாப் அணிகளை புரட்டியெடுத்த முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி களம் இறங்குகிறது. தொடர்ந்து 2 அரைசதம் அடித்த நிதிஷ் ராணா, ராபின் உத்தப்பா, ஆந்த்ரே ரஸ்செல் சுப்மான் கில் ஆகியோர் கொல்கத்தா அணியில் சூப்பர் பார்மில் உள்ளனர்.

ஆனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் லேசுப்பட்டது அல்ல. ஒரு வெற்றி (மும்பைக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (சென்னைக்கு எதிராக) உள்ள அந்த அணிக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும். ஷிகர் தவான், ரிஷாப் பான்ட், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் நிலைத்து நிற்பதை பொறுத்தே அந்த அணியின் ஸ்கோர் அமையும். டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஆடுகளத்தில் பந்து அதிகமாக எழும்பாது என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்)


Next Story