கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான 4–வது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி வெற்றி + "||" + Against Pakistan 4th one day cricket: Australian team win

பாகிஸ்தானுக்கு எதிரான 4–வது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 4–வது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி வெற்றி
ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் நடந்தது.

துபாய், 

ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் நடந்தது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் சோயிப் மாலிக் காயத்தால் ஆடவில்லை. அவருக்கு பதிலாக இமாத் வாசிம் கேப்டன் பொறுப்பை ஏற்றார். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 98 ரன்னில் (82 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) ‘ரன்–அவுட்’ ஆனார். உஸ்மான் கவாஜா 62 ரன்னும், அலெக்ஸ் காரி 55 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் ரன் எதுவும் எடுக்காமலும், அடுத்து வந்த ஹாரிஸ் சோகைல் 25 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

3–வது விக்கெட்டுக்கு முகமது ரிஸ்வான், அபித் அலியுடன் ஜோடி சேர்ந்தார். அறிமுக போட்டியில் ஆடிய அபித் அலி அபாரமாக செயல்பட்டு சதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 218 ரன்னாக உயர்ந்த போது அபித் அலி 119 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அத்துடன் அறிமுக ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அபித் அலி பெற்றார். அபித் அலி ஆட்டம் இழந்ததை அடுத்து களம் கண்ட வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். நிலைத்து நின்று ஆடிய விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 104 ரன்கள் (102 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) எடுத்து அவுட் ஆனார். பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்களே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் 2 வீரர்கள் சதம் அடித்தும் அது அணியின் வெற்றிக்கு பலன் அளிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் கவுல்டர் நிலே 3 விக்கெட்டும், மார்கஸ் ஸ்டோனிஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 4–0 என்ற கணக்கில் போட்டி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி
வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
2. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்; 9 பேர் பலி
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதலில் 6 போலீசார் உள்பட 9 பேர் பலியாகினர்.
3. பாகிஸ்தான், பயங்கரவாதிகளை உண்மையாக தண்டிக்க வேண்டும் - அமெரிக்கா கிடுக்கிப்பிடி
“ஹபீஸ் சயீத் 2001-ல் இருந்து 7 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இது வழக்கமான ஒன்று. பாகிஸ்தான், பயங்கரவாதிகளை உண்மையாக தண்டிக்க வேண்டும்” என்று அமெரிக்கா கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
4. வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.350 கோடி இழப்பு
வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.350 கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தலையொட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்
தலையொட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்.