கிரிக்கெட்

மும்பை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் + "||" + Mumbai captain Rohit Sharma Rs 12 lakh fine

மும்பை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

மும்பை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் தோல்வியை தழுவியது.

மொகாலி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தின் போது மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக மும்பை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக ஐ.பி.எல். நிர்வாகம் விதித்தது. இந்த சீசனில் விதிமீறலில் சிக்கி நடவடிக்கைக்குள்ளான முதல் அணி மும்பை தான்.