கிரிக்கெட்

பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து விவகாரம்: ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுலுக்கு விசாரணை அதிகாரி நோட்டீஸ் + "||" + Controversy over women issue: To Harik Pandya, Lokesh Rahul Investigation officer notices

பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து விவகாரம்: ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுலுக்கு விசாரணை அதிகாரி நோட்டீஸ்

பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து விவகாரம்: ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுலுக்கு விசாரணை அதிகாரி நோட்டீஸ்
பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுலுக்கு விசாரணை அதிகாரி நோட்டீஸ் அனுப்பினார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து தெரிவித்த இழிவான கருத்து சர்ச்சையாக வெடித்ததை தொடர்ந்து இருவரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்தது. பின்னர் இருவர் மீதான இடைநீக்கம் விலக்கி கொள்ளப்பட்டதுடன் தொடர்ந்து விளையாட அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கிடையில் இருவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை சுப்ரீம் கோர்ட்டு நியமனம் செய்தது. இந்த நிலையில் விசாரணை அதிகாரி டி.கே.ஜெயின், ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். ஐ.பி.எல். போட்டியில் ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், லோகேஷ் ராகுல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள். இவ்விரு அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மும்பையில் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. அந்த போட்டிக்கு பிறகு இருவரும் விசாரணைக்கு ஆஜராகக்கூடும் என்று கூறப்படுகிறது.தொடர்புடைய செய்திகள்

1. திருமணம் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சை கருத்து
தனது திருமணம் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சை கருத்தினை தெரிவித்துள்ளார்.
2. பா.ஜனதாவினர் குறித்து சர்ச்சை கருத்து: உத்தரபிரதேச மந்திரி அதிரடி நீக்கம்
பா.ஜனதாவினர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த உத்தரபிரதேச மந்திரி நீக்கம் செய்யப்பட்டார்.
3. கோட்சே குறித்து சர்ச்சை கருத்து: பா.ஜனதா நிர்வாகிகள் மீது நடவடிக்கை -அமித்ஷா எச்சரிக்கை
கோட்சே குறித்து சர்ச்சை கருத்து கூறிய பா.ஜனதா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4. வயநாடு தொகுதி குறித்து சர்ச்சை கருத்து: மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்
வயநாடு தொகுதி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
5. வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக சர்ச்சை கருத்து: சிவசேனா எம்.பி.க்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த சிவசேனா எம்.பி.க்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.