கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல் - முதல் வெற்றியை பெறப்போவது யார்? + "||" + IPL Cricket: Rajasthan Royals-Bengaluru Royal Challengers Today Conflict - Who Will Get First victory?

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல் - முதல் வெற்றியை பெறப்போவது யார்?

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல் - முதல் வெற்றியை பெறப்போவது யார்?
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இன்று மோத உள்ளன. முதல் வெற்றியை பெறும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்குகிறது.
ஜெய்ப்பூர்,

நடப்பு ஐ.பி.எல். தொடரில் வெற்றி கணக்கை தொடங்காத அணிகளாக ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் இருக்கின்றன. இரு அணிகளும் தங்களது முதல் 3 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது. பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னை அணியிடமும், 2–வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடமும், முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியிடமும் தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளிடமும் அடுத்தடுத்து தோல்வி கண்டது. ராஜஸ்தான் அணி தனது 3 ஆட்டங்களிலும் நெருக்கமாக போராடி தான் தோல்வியை தொட்டது.

இவ்விரு அணிகளிலும் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இருந்தாலும் ஒருசேர அணியாக செயல்படுவதில் வெற்றி காண முடியாமல் சரிவை சந்தித்து வருகின்றன. வெற்றி கணக்கை தொடங்கி தங்களுக்குள்ள நெருக்கடியை குறைக்க இரு அணிகளும் கடுமையாக முயலும் என்பதில் இந்த ஆட்டத்தில் அதிரடிக்கு குறைவு இருக்காது. உள்ளூரில் ஆடுவது ராஜஸ்தான் அணிக்கு அனுகூலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் நட்சத்திர வீரர்கள்: கேப்டன் ரஹானே, ஸ்டீவன் சுமித், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜெய்தேவ் உனட்கட், சஞ்சு சாம்சன்

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நட்சத்திர வீரர்கள்: கேப்டன் விராட்கோலி, டிவில்லியர்ஸ், யுஸ்வேந்திர சாஹல், ஹெட்மயர், உமேஷ் யாதவ், பார்த்தீவ் பட்டேல்

இதுவரை நேருக்கு நேர்  - 18

ராஜஸ்தான் வெற்றி - 9, பெங்களூரு வெற்றி - 8, முடிவில்லை - 1

இடம்: ஜெய்ப்பூர், நேரம்: இரவு 8 மணி