சூதாட்ட புகாரில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் லோகுஹெட்டிஜ் இடைநீக்கத்தை உறுதி செய்தது, ஐ.சி.சி.


சூதாட்ட புகாரில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் லோகுஹெட்டிஜ் இடைநீக்கத்தை உறுதி செய்தது, ஐ.சி.சி.
x
தினத்தந்தி 4 April 2019 9:54 PM GMT (Updated: 4 April 2019 9:54 PM GMT)

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான தில்ஹரா லோகுஹெட்டிஜ் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

துபாய்,

இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தற்காலிக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த விவகாரம் குறித்து ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தில்ஹரா லோகுஹெட்டிஜ் மீது விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தல் உள்பட 3 புதிய பிரிவுகளில் ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவினர் குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளனர். மேலும் தில்ஹரா லோகுஹெட்டிஜ் மீதான இடைநீக்கத்தை ஐ.சி.சி. உறுதி செய்து இருப்பதுடன், புதிய குற்றச்சாட்டுகளுக்கு 14 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Next Story