ஹாக்கி

மலேசியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி அபாரம் + "||" + Hocky against Malaysia Indian Womens Team

மலேசியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி அபாரம்

மலேசியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி அபாரம்
மலேசியாவுக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் ஆக்கி அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
கோலாலம்பூர்,

மலேசியாவுக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் ஆக்கி அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்த இந்திய அணி நேற்று 2-வது ஆட்டத்தில் மோதியது. இந்த ஆட்டத்திலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை பந்தாடியது. இந்திய தரப்பில் நவ்ஜோத் கவுர், வந்தனா, நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி, நிக்கி பிரதான் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 3-வது ஆட்டம் நாளை நடக்கிறது.