கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம் + "||" + The IPL In cricket Today game

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்–4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இடம்: மும்பை, நேரம்: இரவு 8 மணி

ரோகித் சர்மா- கேப்டன் - அஸ்வின்


நட்சத்திர வீரர்கள்

பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, ஜோசப், குயின்டான் டி காக்

கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், சாம் குர்ரன், டேவிட் மில்லர்


இதுவரை நேருக்கு நேர் 23

12 வெற்றி 11 வெற்றி

பஞ்சாப் அணியை பழிதீர்க்குமா மும்பை?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்–4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். ஒரு சில அணிகள் இன்னும் ஒரு தடவையே தங்களுக்குள் மோதாத நிலையில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் இந்த சீசனில் 2–வது முறையாக இன்று மல்லுகட்டுகின்றன. இந்த ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே மொகாலியில் சந்தித்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதில் மும்பை நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை பஞ்சாப் அணி 8 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. அந்த தோல்விக்கு சொந்த ஊரில் பழிதீர்க்கும் முனைப்புடன் மும்பை அணியினர் வரிந்து கட்டி நிற்பார்கள்.

மும்பை அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3–ல் வெற்றியும், 2–ல் தோல்வியும் கண்டுள்ளது. முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வெறும் 96 ரன்னில் சுருட்டி மிரட்டியது. மும்பை புதுமுக வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 6 விக்கெட்டுகளை சாய்த்து வரலாறு படைத்தார். அவரது பந்து வீச்சு இந்த ஆட்டத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. சரியாக ஆடாததால் கழற்றி விடப்பட்ட யுவராஜ்சிங்குக்கு இந்த ஆட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்படுமா? என்பது போட்டிக்கு முன்பே தெரியவரும்.

பஞ்சாப் அணி 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று இருக்கிறது. கடைசி ஆட்டத்தில் ஐதராபாத்தை தோற்கடித்ததால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தான் பஞ்சாப் அணி பேட்டிங் தூண்கள் ஆவர். இவர்களை மும்பை பவுலர்கள் சீக்கிரம் காலி செய்தால், பஞ்சாப் அணி பஞ்சாராகி விடும். ஆனால், சுழற்பந்து வீச்சிலும் வலுவாக காணப்படும் பஞ்சாப் அணி வெற்றிப்பயணத்தை நீட்டிக்க கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆடடத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)