கிரிக்கெட்

அர்ஜூனா உள்ளிட்ட விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எஸ்.டி.ஏ.டி. அறிவிப்பு + "||" + Arjuna included Apply for the award of the game STAD Announcement

அர்ஜூனா உள்ளிட்ட விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எஸ்.டி.ஏ.டி. அறிவிப்பு

அர்ஜூனா உள்ளிட்ட விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எஸ்.டி.ஏ.டி. அறிவிப்பு
அர்ஜூனா, கேல் ரத்னா, தயான்சந்த், துரோணாச்சார்யா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி கவுரவித்து வருகிறது.
சென்னை,

விளையாட்டு துறையில் தேசத்துக்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள், விளையாட்டு தொடர்புடைய சாதனையாளர்களுக்கு அர்ஜூனா, கேல் ரத்னா, தயான்சந்த், துரோணாச்சார்யா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.) இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட சான்றிதழ்களுடன் மாவட்ட விளையாட்டு அதிகாரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சென்னை பிரிவு, 30-கிழக்கு கிளப் ரோடு, செனாய் நகர், சென்னை-600030 என்ற முகவரிக்கு வருகிற 16-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என்று சென்னை மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

இதேபோல் வீர தீர செயல் புரிந்தவர்களுக்கான அசோக சக்ரா, கீர்த்தி சக்ரா, சவுர்ய சக்ரா விருது மற்றும் அமைதிக்கான பங்களிப்பு அளித்தவர்களுக்கான மகாத்மா காந்தி விருதுக்கு தகுதி படைத்தவர்களும் மேற்கண்ட விலாசத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.