ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்
x
தினத்தந்தி 13 April 2019 12:18 AM GMT (Updated: 13 April 2019 12:18 AM GMT)

முன்னாள் சாம்பியனான பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ்–ராஜஸ்தான் ராயல்ஸ்

இடம்: மும்பை, நேரம்: மாலை 4 மணி

ரோகித் சர்மா, கேப்டன் ரஹானே

நட்சத்திர வீரர்கள்

பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜோசப், குயின்டான் டி காக், பும்ரா

ஸ்டீவன் சுமித், ஜோஸ் பட்லர், சாம்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால்


இதுவரை நேருக்கு நேர் 18

10 வெற்றி 8 வெற்றி

மும்பையை சமாளிக்குமா ராஜஸ்தான்?

முன்னாள் சாம்பியனான பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று இருக்கிறது. முந்தைய பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 198 ரன்களை சேசிங் செய்து அசத்தியது. அதில் பொல்லார்ட் 10 சிக்சருடன் 83 ரன்கள் விளாசினார். அதே உத்வேகத்துடன் அதுவும் சொந்த ஊரில் (மும்பை வான்கடே மைதானம்) கால்பதிப்பது மும்பை அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும். தசைப்பிடிப்பால் கடந்த ஆட்டத்தால் ஆடாத மும்பை கேப்டன் ரோகித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு விட்டார். இன்றைய அணித்தேர்வுக்கு அவர் தயாராக இருக்கிறார் என்று அந்த அணியின் இயக்குனர் (கிரிக்கெட் ஆபரேட்டிங்) ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்களின் பட்டாளம் அணிவகுத்து நின்றாலும், எல்லோரும் ஒருசேர முத்திரை பதிக்க தவறவிடுகிறார்கள். அதனால் தான் 5 தோல்விகளுடன் பின்தங்கி நிற்கிறது. இன்றைய ஆட்டத்திலாவது ராஜஸ்தான் அணி வெற்றிப்பாதைக்கு திரும்புமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.



கிங்ஸ் லெவன் பஞ்சாப்–பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

இடம்: மொகாலி, நேரம்: இரவு 8 மணி

அஸ்வின் கேப்டன், விராட் கோலி

லோகேஷ் ராகுல், டேவிட் மில்லர், சாம் குர்ரன், முகமது ‌ஷமி, கெய்ல்

டிவில்லியர்ஸ், பார்த்தீவ் பட்டேல், ஸ்டோனிஸ், யுஸ்வேந்திர சாஹல், மொயீன் அலி


இதுவரை நேருக்கு நேர் 22

12 வெற்றி 10 வெற்றி

வெற்றிக்கணக்கை தொடங்குமா பஞ்சாப்?

7 ஆட்டங்களில் விளையாடி 4–ல் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் அணி உள்ளூரில் வலுவாக காணப்படுகிறது. இந்த சீசனில் மொகாலியில் ஆடியுள்ள 3 ஆட்டங்களிலும் அந்த அணிக்கு சுபமான முடிவு கிடைத்துள்ளது. அந்த ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட பஞ்சாப் அணியினர் தீவிர முனைப்பு காட்டுவார்கள். அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் கடந்த ஆட்டத்தின் போது முதுகுவலியால் அவதிப்பட்டார். அதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடுவது சந்தேகம் தான்.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இதுவரை ஆடியுள்ள 6 ஆட்டங்களிலும் தோல்வியே சந்தித்துள்ளது. இந்த சீசனில் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணி பெங்களூரு தான். ஒரு ஆட்டத்தில் 205 ரன்கள் குவித்த போதிலும் சறுக்கலே மிஞ்சியது. திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்களை எப்படி பயன்படுத்தி, வெற்றியை வசப்படுத்துவது என்பது தான் கோலிக்கு இப்போது உள்ள ஒரே சவால் ஆகும். அது மட்டுமின்றி எஞ்சிய 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். அதனால் பெங்களூரு அணிக்கு இது கிட்டதட்ட வாழ்வா? சாவா? மோதல் ஆகும். 5 நாள் ஓய்வுக்கு பிறகு கோலி படையினர் இறங்குவதால் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

பெங்களூரு அணியில் ஸ்டெயின் சேர்ப்பு

புதுடெல்லி,  பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர் நிலே காயம் காரணமாக விலகினார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயினை பெங்களூரு அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்டெயின் 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்புகிறார். அவர் வருகிற 16-ந் தேதி பெங்களூரு அணியுடன் இணைவார் என்று தெரிகிறது. ஸ்டெயின் ஏற்கனவே 2008 முதல் 2010-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பெங்களூரு அணிக்காக ஆடியிருந்தது நினைவு கூரத்தக்கது.


Next Story