கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை அணிக்கு 162 ரன்கள் இலக்கு + "||" + IPL cricket competition The target of 162 runs to the Chennai team

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை அணிக்கு 162 ரன்கள் இலக்கு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை அணிக்கு 162 ரன்கள் இலக்கு
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா, 

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 29-வது லீக் போட்டி நடைபெற்றுவருகிறது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்துள்ளது.

கொல்கத்தா அணியில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் லின் 82 (51) ரன்கள் விளாசினார்.

சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தாகூர் 2 விக்கெட் மற்றும்  சான்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

மேலும் இப்போட்டியில் சென்னை அணி வீரர் டு பிளசிஸ் 4 கேட்சுகள் பிடித்தார்.

இதனையடுத்து சென்னை அணி 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.