கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு + "||" + Hyderabad Sunrisers vs Delhi Capitals

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு

ஐ.பி.எல். கிரிக்கெட்:  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐதராபாத்,

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 6 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது.  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 3 தோல்வி பெற்றுள்ளது. அந்த அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் பெங்களூரு, கொல்கத்தா அணிகளை அடுத்தடுத்து சாய்த்தது. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஆட்டம் இழக்காமல் 97 ரன்கள் குவித்து பார்முக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும். ஐதராபாத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு பதிலடி கொடுக்க டெல்லி அணி முயற்சிக்கும். இரு அணிகளிலும் சிறந்த வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஐதராபாத்தில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.