கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் வார்னர், ஸ்மித் விளையாடும் வாய்ப்பு குறைவு + "||" + Smith, Warner likely to miss final stages of IPL

ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் வார்னர், ஸ்மித் விளையாடும் வாய்ப்பு குறைவு

ஐபிஎல் தொடரின்  கடைசி சில போட்டிகளில் வார்னர், ஸ்மித் விளையாடும் வாய்ப்பு குறைவு
ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் வார்னர், ஸ்மித் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக  கடந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ஸ்மித், வார்னர் ஆகியோரின் தடைக்காலம் நிறைவு பெற்றது. இதையடுத்து, வரும் மே 30 ஆம்தேதி  துவங்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் இரு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். 

உலக கோப்பையில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் வீரர்களுக்கான பயிற்சி முகாம் வரும் மே 2 ஆம் தேதி துவங்குகிறது. உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பிரிஸ்பேனில் நடைபெறும் பயிற்சி முகாமில் கட்டாயம் கலந்து கொள்வது அவசியம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.  ஐபிஎல் தொடரின் கடைசி கட்ட போட்டிகளில் இருவீரர்களும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. 

இந்த பயிற்சி முகாமில், மூன்று பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. ஆஸ்திரேலிய லெவன் மற்றும் நியூசிலாந்து லெவன் அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று பயிற்சி ஆட்டங்களும் ஆலன் பார்டர் மைதானத்தில் நடைபெறுகிறது.  ஐபிஎல் தொடரில் ஐதராபாத் சன்ரைசர்கள் அணிக்காக விளையடும் டேவிட் வார்னர் தற்போது வரை ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

பிளே ஆப் சுற்றுகளுக்கு வார்னர், ஸ்மித் ஆகியோர் இடம் பெற்றிருந்த அணிகள் தகுதி பெறும் பட்சத்தில் இரு வீரர்களும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. அதேபோல், மும்பை அணிக்காக விளையாடி வரும் பெஹ்ரண்டார்ப் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் மார்கஸ் ஸ்டோயினிஸ் ஆகியோரும் உலக கோப்பையில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ளதால், இந்த வீரர்களும் கடைசி கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் மீது பாக்.அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி குற்றச்சாட்டு
இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் வர மறுப்பதற்கு ஐபிஎல் தான் காரணம் என்று அப்ரிடி குற்றம் சாட்டியுள்ளார்.