கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு + "||" + IPL cricket competition Mumbai won the toss and elected to bowl

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு
பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
மும்பை,

மும்பையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான 31-வது லீக் போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து பெங்களூர் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

பெங்களூர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், தனது வெற்றி உத்வேகத்தை தொடர பெங்களூரு அணி எல்லா வகையிலும் முயலும். 

அத்துடன் இனிவரும் எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் பெங்களூரு அணி ‘பிளே–ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் வெற்றிக்காக அந்த அணி கடுமையாக மல்லுக்கட்டும். 

அதேநேரத்தில் மும்பை அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப தனது முழு வேகத்தையும் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

மும்பை அணியின் நட்சத்திர வீரர்கள்:-

ரோகித் சர்மா (கேப்டன்), பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குயின்டான் டி காக், மலிங்கா, பும்ரா

பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர்கள்:-

விராட்கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், பார்த்தீவ் பட்டேல், மார்கஸ் ஸ்டோனிஸ், யுஸ்வேந்திர சாஹல், மொயீன் அலி.