உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிப்பு புதுமுக வீரர் அபு ஜயித்துக்கு வாய்ப்பு


உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிப்பு புதுமுக வீரர் அபு ஜயித்துக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 16 April 2019 9:45 PM GMT (Updated: 16 April 2019 8:21 PM GMT)

12–வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30–ந் தேதி முதல் ஜூலை 14–ந் தேதி வரை நடக்கிறது.

டாக்கா, 

12–வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30–ந் தேதி முதல் ஜூலை 14–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான வங்காளதேச அணியை, அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. கடந்த மாதம் நடந்த நியூசிலாந்து டெஸ்ட் போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் அபு ஜயித் புதுமுக வீரராக அணியில் இடம் பிடித்துள்ளார். 5 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் அவர் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்வதில் கில்லாடி என்பதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது, பேட்ஸ்மேன் இம்ருல் கெய்ஸ் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மொசாடெக் ஹூசைன் அணிக்கு திரும்பி இருக்கிறார். கடைசியாக அவர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்து இருந்தார். காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இடம் பெறாத ‌ஷகிப் அல்–ஹசன் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். உலக கோப்பை போட்டியில் வங்காளதேச அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை (ஜூன் 2–ந் தேதி) எதிர்கொள்கிறது.

உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட வங்காளதேச கிரிக்கெட் அணி வருமாறு:–

மோர்தசா (கேப்டன்), தமிம் இக்பால், லிட்டான் தாஸ், சவும்யா சர்கார், முஷ்பிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), மக்முதுல்லா, ‌ஷகிப் அல்–ஹசன் (துணை கேப்டன்), முகமது மிதுன், சபீர் ரகுமான், மொசாடெக் ஹூசைன், முகமது சைபுதீன், மெகிதி ஹசன் மிராஸ், ருபெல் ஹூசைன், முஸ்தாபிஜூர் ரகுமான், அபு ஜயித்.


Next Story