கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரர்களாக ரிஷாப் பான்ட், அம்பத்தி ராயுடு தேர்வு + "||" + As the replacement players of the Indian team Rishabh Band, Ambati Rayudu Selection

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரர்களாக ரிஷாப் பான்ட், அம்பத்தி ராயுடு தேர்வு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரர்களாக ரிஷாப் பான்ட், அம்பத்தி ராயுடு தேர்வு
இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் விராட்கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

புதுடெல்லி, 

இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் விராட்கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்திராயுடு ஆகியோருக்கு இடம் அளிக்கப்படாதது விவாதத்தை கிளப்பி இருக்கிறது. ரிஷாப் பான்ட் இந்திய அணியில் இடம் பெறாதது ஆச்சரியம் அளிக்கிறது என்று இந்திய முன்னாள் கேப்டன் கவாஸ்கர் விமர்சித்து இருந்தார். அம்பத்தி ராயுடுவுக்கு இடம் மறுக்கப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்து இருந்தார். தனக்கு பதிலாக விஜய் சங்கரை தேர்வு செய்து இருந்ததை அம்பத்தி ராயுடு மறைமுகமாக கிண்டல் செய்து இருந்தார். இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரர்களாக ரிஷாப் பான்ட், அம்பத்தி ராயுடு, வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று தெரிவித்துள்ளது. இந்திய அணியில் இடம் பிடித்துள்ள 15 வீரர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டு விலக நேரிட்டால், இந்த மாற்று வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.