கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம் + "||" + In IPL cricket Today's game

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
டெல்லி, மும்பை இரு அணிகளும் ஒரே மாதிரியாக தலா 5 வெற்றி, 3 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன.

டெல்லி டேர்டெவில்ஸ் – மும்பை இந்தியன்ஸ்

இடம்: டெல்லி, நேரம்: இரவு 8 மணி

ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன் ரோகித் சர்மா

நட்சத்திர வீரர்கள்

ஷிகர் தவான், ரிஷாப் பான்ட், ரபடா, பிரித்வி ஷா, காலின் இங்ராம்

குயின்டான் டி காக், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், பும்ரா, மலிங்கா

இதுவரை நேருக்கு நேர் 23

12 வெற்றி 11 வெற்றி

டெல்லி அணியின் வெற்றிப்பயணம் தொடருமா?

டெல்லி, மும்பை இரு அணிகளும் ஒரே மாதிரியாக தலா 5 வெற்றி, 3 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. இளமையும், அனுபவமும் கொண்ட டெல்லி அணி தனது கடைசி 3 ஆட்டங்களிலும் வரிசையாக வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதே போல் மும்பை அணி முந்தைய ஆட்டத்தில் பெங்களூருவை தோற்கடித்து இருந்தது. அதே உத்வேகத்துடன் இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே மும்பையில் சந்தித்த ஆட்டத்தில் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்தது. இதில் ரிஷாப் பான்ட் 27 பந்தில் 78 ரன்கள் விளாசி பிரமாதப்படுத்தினார். அந்த தோல்விக்கு பழிதீர்க்க மும்பை அணி தீவிரம் காட்டும். டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது. அதனால் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும்.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸபோர்ட்ஸ்)