கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு + "||" + World Cup cricket tournament Sri Lanka, South Africa and Pakistan teams announcement

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் நேற்று ஒரே நாளில் அறிவிக்கப்பட்டன.

கொழும்பு, 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் நேற்று ஒரே நாளில் அறிவிக்கப்பட்டன.

உலக கோப்பை கிரிக்கெட்

12–வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30–ந் தேதி முதல் ஜூலை 14–ந் தேதி வரை நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய 3 அணிகள் அறிவிக்கப்பட்டன.

தினேஷ் சன்டிமால் நீக்கம்

15 பேர் கொண்ட இலங்கை அணிக்கு தசைப்பிடிப்பு காயத்தால் அவதிப்பட்ட முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், லஹிரு திரிமன்னே ஆகியோர் திரும்பி இருக்கிறார்கள். காயத்தில் இருந்து மீண்டு உடல் தகுதியை பெற்றுள்ள குசல் பெரேரா விக்கெட் கீப்பராக தேர்வாகி இருக்கிறார். மோசமான பார்ம் காரணமாக விக்கெட் கீப்பர் நிரோ‌ஷன் டிக்வெல்லாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. முன்னாள் கேப்டன் தினேஷ் சன்டிமால், உபுல் தரங்கா ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஓரங்கட்டப்பட்டு உள்ளனர். 35 வயதான வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் அணியில் ஒரு வீரராக தொடருகிறார்.

உலக கோப்பை போட்டிக்கான இலங்கை அணி வருமாறு:–

திமுத் கருணாரத்னே (கேப்டன்), அவிஷ்கா பெர்னாண்டோ, லஹிரு திரிமன்னே, குசல் பெரேரா (விக்கெட் கீப்பர்), குசல் மென்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா, ஜீவன் மென்டிஸ், மிலின்டா ஸ்ரீவர்தனா, ஏஞ்சலோ மேத்யூஸ், திசரா பெரேரா, இசுரு உதனா, மலிங்கா, சுரங்கா லக்மல், ஜெப்ரி வாண்டர்சே, நுவான் பிரதீப்.

ஹசிம் அம்லாவுக்கு இடம்

உலக கோப்பை போட்டிக்கு முன்பாக உடல் தகுதியை எட்டி விடுவார் என்ற நம்பிக்கையில் காயம் அடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்டி தென்ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக பேட்டிங்கில் ஜொலிக்காவிட்டாலும் ஹசிம் அம்லா அனுபவத்தின் அடிப்படையில் அணியில் இடம் பிடித்துள்ளார். உலக கோப்பைக்கான தென்ஆப்பிரிக்க அணியினர் வருமாறு:–

பாப் டுபிளிஸ்சிஸ் (கேப்டன்), டுமினி, டேவிட் மில்லர், ஸ்டெயின், பெலக்வாயோ, இம்ரான் தாஹிர், ரபடா, பிரிட்டோரியஸ், குயின்டான் டி காக், ஆன்ரிச் நோர்ட்டி, லுங்கி நிகிடி, மார்க்ராம், வான்டெர் துஸ்சென், ஹசிம் அம்லா, தப்ரைஸ் ‌ஷம்சி.

முகமது அமிருக்கு இடமில்லை

பாகிஸ்தான் உத்தேச அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இடம் அளிக்கப்படவில்லை. ஆனால் அவர் மாற்று ஆட்டக்காரர் பட்டியலில் உள்ளார். அத்துடன் இங்கிலாந்து தொடருக்கான ஒரு நாள், 20 ஓவர் அணியில் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து தொடரில் அவர் செயல்படுவதை பொறுத்து இறுதி அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

பாகிஸ்தான் உத்தேச அணி வீரர்கள் வருமாறு:–

சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), இமால் உல்–ஹக், அபித் அலி, ஜூனைட் கான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், பகீம் அஷ்ரப், முகமது ஹஸ்னைன், பஹார் ஜமான், ‌ஷதப்கான், ஹாரிஸ் சோகைல், ‌ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, சோயிப் மாலிக், இமாத் வாசிம். மாற்று ஆட்டக்காரர்களாக வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர், பேட்ஸ்மேன் ஆசிப் அலி ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உலகளாவிய நிதி கண்காணிப்புக்குழு பயங்கரவாத தடுப்பு பட்டியலில் பாகிஸ்தான்
உலகளாவிய நிதி கண்காணிப்புக்குழு ஆசிய-பசிபிக் பிரிவின் பயங்கரவாத தடுப்பு பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெற்று உள்ளது.
2. பாகிஸ்தானில் இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களை பரப்பிய 200 பேரின் கணக்குகளை முடக்கியது டுவிட்டர்
பாகிஸ்தானில் இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களை பரப்பிய 200 பேரின் கணக்குகளை டுவிட்டர் முடக்கியுள்ளது.
3. ஆஷஸ் டெஸ்ட் தொடர்: 3-வது போட்டியில் இருந்து ஸ்டீவன் ஸ்மித் விலகல்
காயம் காரணமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் இருந்து ஸ்டீவன் ஸ்மித் விலகியுள்ளார்.
4. பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டு காலம் நீட்டிப்பு
பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
5. பிரிவு 370: காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் சவால்
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது தொடர்பாக பொதுவாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் சவால் விடுத்துள்ளார்.