கிரிக்கெட்

பெண்கள் பற்றி சர்ச்சை கருத்து கூறிய ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் + "||" + BCCI Ombudsman directs KL Rahul & Hardik Pandya to pay Rs1,00,000

பெண்கள் பற்றி சர்ச்சை கருத்து கூறிய ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்

பெண்கள் பற்றி சர்ச்சை கருத்து கூறிய  ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்
பெண்கள் பற்றி சர்ச்சை கருத்து கூறிய ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை,

கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல்  ஆகியோர் இயக்குனர் கரண் ஜோஹர் நடத்திய டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது பெண்கள் குறித்து இவர்கள் தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இதையடுத்து இருவரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்தது. பின்னர் அதை விலக்கி தொடர்ந்து விளையாட அனுமதித்தது. இதற்கிடையே தங்கள் பேச்சுக்கு இருவரும் மன்னிப்பு கேட்டனர்.

இதற்கிடையில் இருவர் மீதான புகார் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை உச்சநீதிமன்றம் நியமித்தது. ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டார். விசாரணையின் முடிவில், "ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகிய  இருவருக்கும் தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வீரர்களும்,  உயிரிழந்த 10 துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்க வேண்டும், பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்காக தலா ரூ.10 லட்சத்தை இருவரும் வழங்க வேண்டும். 4 வாரங்களுக்குள் இந்த தொகையை அளிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த தொகையை இருவரும் டெபாசிட் செய்யாவிட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் போட்டி கட்டணத்தில் இருந்து பிசிசிஐ இந்த தொகையை கழித்துக் கொள்ள வேண்டும்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாண்ட்யா, கே.எல் ராகுல் சர்ச்சை கருத்து: ”பாடம் கற்றுக்கொண்டேன்” கரண் ஜோஹர் கருத்து
பாண்ட்யா, கே.எல் ராகுல் சர்ச்சை கருத்துக்களை கூறிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கரண் ஜோஹர் இவ்விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.
2. ‘ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்’ - இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் வேண்டுகோள்
‘ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சி.கே.கண்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. பாண்ட்யா, லோகேஷ் : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழக்க வாய்ப்பு
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பாண்ட்யா, லோகேஷ் ஆகியோருக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
4. பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: பாண்ட்யா, லோகேஷ் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்க பரிந்துரை
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததன் விளைவாக ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடையை எதிர்நோக்கியுள்ளனர்.
5. பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: ஹர்திக் பாண்ட்யா மன்னிப்பு கேட்டார்; பிசிசிஐ நோட்டீஸ்
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா மன்னிப்பு கேட்டுள்ளார்.