கிரிக்கெட்

ஸ்டீவன் சுமித்துக்கு பொறுப்பு: ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஹானே நீக்கம் + "||" + Captain of the Rajasthan team Rahane removal

ஸ்டீவன் சுமித்துக்கு பொறுப்பு: ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஹானே நீக்கம்

ஸ்டீவன் சுமித்துக்கு பொறுப்பு: ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஹானே நீக்கம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அஜிங்யா ரஹானே அந்த பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்.

ஜெய்ப்பூர், 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அஜிங்யா ரஹானே அந்த பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். ரஹானே தலைமையில் முதல் 8 ஆட்டங்களில் 2–ல் மட்டுமே வெற்றி பெற்றதால் ராஜஸ்தான் அணி நிர்வாகம் அதிருப்திக்குள்ளாகி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இது குறித்து ராஜஸ்தான் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஐ.பி.எல்.–ல் இனி வரும் ஆட்டங்களில் ராஜஸ்தான் அணியை ஸ்டீவன் சுமித் வழிநடத்துவார். ரஹானே கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணியை அற்புதமாக வழிநடத்தி ‘பிளே–ஆப்’ சுற்று வரை முன்னேற வைத்தார். ஆனால் இப்போது அணி நிர்வாகம் அடுத்த கட்டத்தை எட்டுவதற்கு புத்துணர்ச்சியுடன் கூடிய அணுகுமுறை அவசியம் என்று கருதுவதால், இந்த மாற்றத்தை செய்துள்ளது. இருப்பினும் ரஹானே அணியில் முக்கியமான வீரராக தொடர்ந்து நீடிப்பார்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் ஓராண்டு தடையை அனுபவித்த ஸ்டீவன் சுமித் மறுபடியும் கேப்டன் பதவியை ஏற்றதோடு நேற்றைய ஆட்டத்திலும் வெற்றியை தேடித்தந்தார்.

ஆனால் உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணிக்கு தேர்வாகியுள்ள ஸ்டீவன் சுமித், மே 1–ந்தேதி வரை தான் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியும். சுமித் தாயகம் திரும்பிய பிறகு ராஜஸ்தான் அணிக்கு மீண்டும் புதிய கேப்டனை நியமிக்க வேண்டி வரும்.