கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள் + "||" + In IPL cricket Today's matches

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்
இடம்: ஐதராபாத், நேரம்: மாலை 4 மணிவில்லியம்

ஐதராபாத் சன்ரைசர்ஸ்– கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இடம்: ஐதராபாத், நேரம்: மாலை 4 மணி

வில்லியம்சன் கேப்டன் தினேஷ் கார்த்திக்

நட்சத்திர வீரர்கள்

வார்னர், பேர்ஸ்டோ, ரஷித்கான், புவனேஷ்வர்குமார், விஜய் சங்கர்

ரஸ்செல், நிதிஷ் ராணா, கிறிஸ் லின், சுனில் நரின், சுப்மான் கில்

இதுவரை நேருக்கு நேர் 16

6 வெற்றி 10 வெற்றி

வெற்றிப்பாதைக்கு திரும்புமா கொல்கத்தா?

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று இருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஐதராபாத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் (450 ரன்), ஜானி பேர்ஸ்டோ (365 ரன்) மற்றும் சிக்கமான பந்து வீசுவதில் கில்லாடியான சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் (8 விக்கெட்) ஆகியோர் முதுகெலும்பாக விளங்குகிறார்கள். இவர்கள் ஒருசேர ஜொலித்தால், அதன் பிறகு ஐதராபாத் அணியை கட்டுப்படுத்துவது கடினமாகி விடும்.

கொல்கத்தா அணியில், சிக்சர் மழை பொழியும் ஆந்த்ரே ரஸ்செல் காயத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆடுகிறார். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 9 சிக்சருடன் 65 ரன்கள் நொறுக்கினார். ஆனாலும் வெற்றி கிடைக்கவில்லை. முதல் 5 ஆட்டங்களில் 4–ல் வெற்றி கண்ட கொல்கத்தா அணி, கடைசியாக ஆடிய 4 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக தோற்று நெருக்கடியில் தவிக்கிறது. ஆனால் ஐதராபாத் அணியை ஏற்கனவே சொந்த ஊரில் பதம் பார்த்து இருக்கும் கொல்கத்தா அணி, இன்றைய ஆட்டத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்ப கடுமையாக முயற்சிக்கும். இந்த தொடரில் இனி ஒவ்வொரு வெற்றிகளும் முக்கியமானது என்பதால் இரு அணி வீரர்களும் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்–சென்னை சூப்பர் கிங்ஸ்

இடம்: பெங்களூரு, நேரம்: இரவு 8 மணி

விராட் கோலி கேப்டன் டோனி

நட்சத்திர வீரர்கள்

ஸ்டெயின், டிவில்லியர்ஸ், மொயீன் அலி, பார்த்தீவ் பட்டேல், சாஹல்

பிளிஸ்சிஸ், வாட்சன், சுரேஷ் ரெய்னா, தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்

இதுவரை நேருக்கு நேர் 23 (முடிவில்லை 1)

7 வெற்றி 15 வெற்றி

‘பிளே–ஆப்’ சுற்றை எட்டும் வேட்கையில் சென்னை அணி

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 2 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் முதல் அணியாக அடுத்த சுற்று வாய்ப்பை (பிளே–ஆப் சுற்று) உறுதி செய்து விட முடியும். லேசான முதுகு வலி காரணமாக முந்தைய ஆட்டத்தில் ஓய்வு எடுத்த கேப்டன் டோனி இந்த ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது.

பெங்களூரு அணி 2 வெற்றி, 7 தோல்வி என்று 4 புள்ளியுடன் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது. எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி யோசிக்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டியது தான். கொல்கத்தா அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 213 ரன்கள் குவித்ததுடன், கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அட்டகாசப்படுத்தினார். அதே உத்வேகத்துடன் உள்ளூரில் அதிரடி காட்ட காத்திருக்கிறார்கள். இந்த சீசனின் தொடக்க ஆட்டத்தில் சென்னை–பெங்களூரு அணிகள் தான் சந்தித்தன. அதில் பெங்களூரு அணி வெறும் 70 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்தது. அதற்கு பரிகாரம் தேடுவதற்கு பெங்களூரு அணி தீவிரம் காட்டுவதால், போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)