கிரிக்கெட்

பஞ்சாப் கேப்டன் அஸ்வினுக்கு அபராதம் + "||" + Punjab captain Penalty for ashvin

பஞ்சாப் கேப்டன் அஸ்வினுக்கு அபராதம்

பஞ்சாப் கேப்டன் அஸ்வினுக்கு அபராதம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடந்த டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை.

புதுடெல்லி, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடந்த டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. தாமதமாக பந்து வீசியதற்காக கேப்டன் என்ற முறையில் பஞ்சாப் கேப்டன் அஸ்வினுக்கு ரூ.12 லட்சத்தை ஐ.பி.எல். அமைப்பு அபராதமாக விதித்துள்ளது. இந்த சீசனில் இத்தகைய குற்றச்சாட்டில் சிக்கிய 4–வது கேப்டன் அஸ்வின் ஆவார்.

ஐ.பி.எல். விதிமுறைப்படி தவிர்க்க முடியாத காரணத்தை தவிர்த்து ஒரு ஆட்டத்தை அதிகபட்சமாக 3 மணி 20 நிமிடங்களில் முடிக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டில் ஒரு சில ஆட்டங்கள் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது குறிப்பிடத்தக்கது.