கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம் + "||" + In IPL cricket Today's game

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 10 ஆட்டங்களில் ஆடியுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்வியுடன் மொத்தம் 12 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ்– டெல்லி கேப்பிட்டல்ஸ்

இடம்: ஜெய்ப்பூர், நேரம்: இரவு 8 மணி

ஸ்டீவன் சுமித் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்

நட்சத்திர வீரர்கள்

ரஹானே, சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால்

தவான், ரிஷாப் பான்ட், ரபடா, இங்ராம், அக்‌ஷர் பட்டேல்

இதுவரை நேருக்கு நேர் 18

11 வெற்றி 7 வெற்றி

வெற்றியை தொடரப்போவது யார்?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 10 ஆட்டங்களில் ஆடியுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்வியுடன் மொத்தம் 12 புள்ளிகள் பெற்று இருக்கிறது. எஞ்சிய 4 ஆட்டங்களில் 2–ல் வெற்றி பெற்றால் டெல்லி அணி சிக்கலின்றி அடுத்த சுற்றை எட்டி விடும். முந்தைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை பதம் பார்த்த டெல்லி அணி, அதே உத்வேகத்தை தொடர முயற்சிக்கும். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஷிகர் தவான், ரிஷாப் பான்ட் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் அக்‌ஷர் பட்டேல், ரபடா, லாமிச்சன்னே கைகொடுக்கிறார்கள்.

9 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 6 தோல்வி கண்டுள்ள ராஜஸ்தான் அணி மீதமுள்ள 5 ஆட்டங்களில் குறைந்தது 4–ல் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். எழுச்சி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் ரஹானேவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு ஸ்டீவன் சுமித்திடம் அணியை வழிநடத்தும் பொறுப்பை ராஜஸ்தான் அணி நிர்வாகம் வழங்கியது. அவரும் அதற்கு ஏற்றார் போல் மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்ததோடு வெற்றியை தேடிக்கொடுத்தார். ஆனால் அதிரடி மன்னன் ஜோஸ் பட்லர் தாயகம் திரும்பியிருப்பது ராஜஸ்தானுக்கு கொஞ்சம் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை. வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரும், சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபாலும் எதிரணியை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். 17 வயது பேட்ஸ்மேன் ரியான் பராக் மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. உள்ளூரில் ஆடுவது ராஜஸ்தானுக்கு சாதகமான அம்சமாகும். இரு அணிகளும் சரிசமபலத்துடன் காணப்படுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். இந்த சீசனில் ராஜஸ்தான்–டெல்லி அணிகள் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)


தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடி–கோவை அணிகள் இன்று மோதல் சென்னையில் நடக்கிறது
4–வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி உள்பட இரண்டு ஆட்டங்கள் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? காஞ்சி வீரன்சுடன் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று காஞ்சி வீரன்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
3. உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ‘ஓவர்துரோ’ மூலம் வந்த பவுண்டரியை வேண்டாம் என்று சொல்லவில்லை பென் ஸ்டோக்ஸ் மறுப்பு
இங்கிலாந்தில் கடந்த மாதம் நடந்த 12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் மோதின.
4. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் வேணுகோபால் ராவ்
இந்திய கிரிக்கெட் வீரர் வேணுகோபால் ராவ் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
5. எம்.எஸ்.டோனி கிரிக்கெட்டில் இருந்து நிரந்தர ஓய்வு இல்லை - 2 மாதமே ஓய்வு தகவல்
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் எம்.எஸ்.டோனி கலந்து கொள்ளவில்லை, இப்போது ஓய்வும் பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.