கிரிக்கெட்

சமூக வலைதளங்களில் டோனியை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் ! + "||" + "MS Dhoni For PM": CSK Captain Almost Pulls Off The Impossible, Twitter Goes Crazy

சமூக வலைதளங்களில் டோனியை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் !

சமூக வலைதளங்களில் டோனியை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் !
பெங்களூருக்கு எதிராக டோனி 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்ததை அவரது ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றியை ருசித்தது. 

முன்னதாக, சென்னை அணியின் கேப்டன் டோனி, 48 பந்துகளில் 84 ரன்கள் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். குறிப்பாக கடைசி ஓவரில் 26 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில்,  டோனியின் ருத்ரதாண்டவத்தால் சென்னை அணி 24 ரன்கள் சேர்த்து நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தது. குறிப்பாக உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரின் 2-வது பந்தில் டோனி அடித்த ஒரு பந்து மைதானத்திற்கு வெளியே பறந்தது. 111 மீட்டர் தூரம் சென்ற சிக்சர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. 

சென்னை அணி தோற்ற பதிலும் டோனியின் இன்னிங்ஸ் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தது. இதனால், சமூக வலைதளங்களிலும் டோனியின் ரசிகர்கள், அவரை புகழ்ந்து வருகின்றனர். சில ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று, டோனி தேர்தலில் போட்டியிட்டால் அவருக்குதான் எனது ஓட்டு, டோனி ஃபார் பிஎம் என பதிவிட்டுள்ளார். 

தொடர்ந்து பல ரசிகர்கள் டோனி போட்டியிட்டால் அவர் பிரதமர் ஆகவே தாங்கள் வாக்களிக்க போவதாக தெரிவித்துள்ளனர். சில ரசிகர்கள் டோனியின் இப்படி ஒரு இன்னிங்சை பார்த்ததே போது, தோல்வி பற்றி எங்களுக்கு அக்கறையில்லை என பதிவிட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தாலும் டோனி தனது பேட்டால் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், டோனியின் இன்னிங்ஸ் இந்திய அணியின் உலக கோப்பை கனவுக்கு மேலும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.