கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு + "||" + Afghan squad Announcement for the World Cup Cricket

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
காபுல்,

12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அணிகளை அறிவிக்க இன்று கடைசி நாளாகும். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆஸ்கர் ஆப்கன் அணியில் இடம் பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஹமித் ஹஸ்சன் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உடல் தகுதி இல்லாததால் 2016-ம் ஆண்டுக்கு பிறகு அணியில் இடம் பெறாத அவருக்கு மீண்டும் இடம் கிடைத்து இருக்கிறது. உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வருமாறு:-


குல்படின் நைப் (கேப்டன்), முகமது ஷாசாத் (விக்கெட் கீப்பர்), நூர் அலி ஜட்ரன், ஹஸ்ரத்துல்லா ஜசாய், ரஹ்மத் ஷா, ஆஸ்கர் ஆப்கன், ஹஸ்மத்துல்லா ஷகிதி, நஜிபுல்லா ஜட்ரன், சமியுல்லா ஷின்வாரி, முகமது நபி, ரஷித் கான், தல்வாத் ஜட்ரன், அப்தாப் ஆலம், ஹமித் ஹசன், முஜீப் ரகுமான்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் வஹாப், ஆசிப் அலி, முகமது அமிர் சேர்ப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ், ஆசிப் அலி, முகமது அமிர் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
2. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடலை வெளியிட்டது ஐசிசி!!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடல் ஒன்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
3. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு - ஐ.சி.சி. அறிவிப்பு
இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசாக வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
4. இந்திய அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்த்து இருக்க வேண்டும் - கம்பீர் கருத்து
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்த்து இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
5. துளிகள்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில், வீரர்கள் கலவை சிறப்பாக இருப்பதாக ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார்.