கிரிக்கெட்

பிறந்த நாளை முன்னிட்டு வீட்டுக்கு வெளியே திரண்ட ரசிகர்களை சந்தித்தார் சச்சின் டெண்டுல்கர் + "||" + Maharashtra: Sachin Tendulkar meets fans gathered outside his residence in Mumbai on his birthday.

பிறந்த நாளை முன்னிட்டு வீட்டுக்கு வெளியே திரண்ட ரசிகர்களை சந்தித்தார் சச்சின் டெண்டுல்கர்

பிறந்த நாளை முன்னிட்டு வீட்டுக்கு வெளியே திரண்ட ரசிகர்களை சந்தித்தார் சச்சின் டெண்டுல்கர்
பிறந்த நாளை முன்னிட்டு வீட்டுக்கு வெளியே திரண்ட ரசிகர்களை சச்சின் டெண்டுல்கர் சந்தித்து வாழ்த்தை ஏற்றுக்கொண்டார்.
மும்பை, 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 46-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், டெண்டுல்கரின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் மறவாது சமூக வலைதளங்களில் நினைவுகூர்ந்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பிறந்த நாளை முன்னிட்டு சச்சினுக்கு வாழ்த்துக்கூற அவரது ரசிகர்கள் வீட்டு வெளியே திரண்டனர்.

இதையடுத்து, வீட்டுக்கு வெளியே வந்த சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களை சந்தித்து வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். டுவிட்டரில் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பது தொடர்பான டுவிட்கள் டிரெண்டிங்கில் முன்னணியில் உள்ளது.