கிரிக்கெட்

உலக கோப்பையில் அரைஇறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எவை?கங்குலி கணிப்பு + "||" + In the World Cup Progress to half-life What are 4 teams Ganguly prediction

உலக கோப்பையில் அரைஇறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எவை?கங்குலி கணிப்பு

உலக கோப்பையில் அரைஇறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எவை?கங்குலி கணிப்பு
இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்தியா காணப்படுகிறது.
கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்தியா காணப்படுகிறது. அரைஇறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் முன்னேறும் என்பதே எனது கணிப்பாகும். இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் லீக் சுற்றில் மோதி, அதில் இருந்து சிறந்த 4 அணிகள் அரைஇறுதிக்கு வருகின்றன. அனேகமாக இந்த பாணியில் நடத்தப்படுவதே உலக கோப்பை போட்டியில் சிறப்புக்குரியதாகும்.’ என்றார்.