கிரிக்கெட்

முதல் 4 வாரத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை 41 கோடி பேர் பார்த்துள்ளனர்ஸ்டார் நிறுவனம் தகவல் + "||" + In the first 4 weeks The IPL Cricket match 41 crore people have seen Star company information

முதல் 4 வாரத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை 41 கோடி பேர் பார்த்துள்ளனர்ஸ்டார் நிறுவனம் தகவல்

முதல் 4 வாரத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை 41 கோடி பேர் பார்த்துள்ளனர்ஸ்டார் நிறுவனம் தகவல்
ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது.
சென்னை,

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் 4 வாரங்களில் இந்த போட்டியை டெலிவிஷன் மற்றும் ‘ஹாட்ஸ்டார்’ வழியாக 41 கோடியே 10 லட்சம் பேர் கண்டுகளித்து இருப்பதாக ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியை பார்க்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 52 சதவீதம் ஆகும். கடந்த சீசனுடன் ஒப்பிடும் போது பெண் பார்வையாளர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டை இந்த வகையில் பார்த்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 41 கோடியே 40 லட்சம் பேர் ஆவர். அந்த எண்ணிக்கையை இந்த ஆண்டு முதல் 4 வாரத்திலேயே நெருங்கி விட்டது.