கிரிக்கெட்

‘தோல்வி காணும் போது கேப்டன் மாற்றம் குறித்து கேள்வி எழத்தான் செய்யும்’ தினேஷ் கார்த்திக் சொல்கிறார் + "||" + The question arises, "says Dinesh Karthik

‘தோல்வி காணும் போது கேப்டன் மாற்றம் குறித்து கேள்வி எழத்தான் செய்யும்’ தினேஷ் கார்த்திக் சொல்கிறார்

‘தோல்வி காணும் போது கேப்டன் மாற்றம் குறித்து கேள்வி எழத்தான் செய்யும்’ தினேஷ் கார்த்திக் சொல்கிறார்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தியது.
கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தியது. இதில் கொல்கத்தா அணி நிர்ணயித்த 176 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. ரியான் பராக் (47 ரன்), ஜோப்ரா ஆர்ச்சர் (27 ரன்) கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி வெற்றிக்கு உதவினர். கொல்கத்தா அணி தொடர்ச்சியாக சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.

தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘சில சமயங்களில் ஆட்ட முடிவுகள் நமக்கு சாதகமாக அமையவில்லை என்றால் கேப்டன் மாற்றம் குறித்து கேள்வி எழத்தான் செய்யும். அதை நான் புரிந்து வைத்து இருக்கிறேன். ஆனால் நாங்கள் ஒரு அணியாக பல விஷயங்களை சரியாக செய்ய முயற்சிக்கிறோம். எந்த தவறையும் கவனிக்காமல் இல்லை. சரியான மாற்றங்கள் செய்ய முயற்சிக்கிறோம். நல்ல அணி தேர்வு செய்து ஒவ்வொரு ஆட்டத்தையும் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் தான் களம் காணுகிறோம். அணி வீரர்கள் கேப்டன் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். எங்களது பேட்டிங் நன்றாக இருக்கிறது. ஒட்டு மொத்த பவுலிங்கில் லேசான முன்னேற்றம் காண வேண்டும். நெருக்கமான போட்டிகளில் நாங்கள் கோட்டை விட்டு விடுகிறோம். அந்த விஷயத்தில் நாங்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்’ என்றார்.