கிரிக்கெட்

ஐ.பி.எல். ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்களை அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்க முடிவு + "||" + The IPL Play off round matches Before half an hour Decide to start

ஐ.பி.எல். ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்களை அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்க முடிவு

ஐ.பி.எல். ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்களை அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்க முடிவு
ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டங்கள் மாலை 4 மணி, இரவு 8 மணி என்று இரண்டு நேரங்களில் தொடங்கி நடக்கிறது. லீக் சுற்று முடிந்ததும் 3 ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி நடக்கிறது.
புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டங்கள் மாலை 4 மணி, இரவு 8 மணி என்று இரண்டு நேரங்களில் தொடங்கி நடக்கிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலையை தவிர ஒரு ஆட்டம் அதிகபட்சமாக 3 மணி 20 நிமிடங்களில் நிறைவடைய வேண்டும் என்பது ஐ.பி.எல். விதிமுறையாகும். ஆனால் இந்த சீசனில் பல ஆட்டங்கள் 4 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து இருக்கிறது.


லீக் சுற்று முடிந்ததும் 3 ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி நடக்கிறது. இந்த நிலையில் ஆட்டம் நள்ளிரவை தாண்டியும் நடப்பதை தவிர்ப்பதற்காக பிளே-ஆப் மற்றும் இறுதி ஆட்டத்தை அரைமணி நேரத்திற்கு முன்பாக, அதாவது இரவு 7.30 மணிக்கு தொடங்குவது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதே போல் அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் நடக்கும் பெண்கள் ஐ.பி.எல். ஆட்டங்களும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்று தெரிகிறது.