கிரிக்கெட்

ரஸ்செல் திடீர் குற்றச்சாட்டு + "||" + Andre Russell sudden accusation

ரஸ்செல் திடீர் குற்றச்சாட்டு

ரஸ்செல் திடீர் குற்றச்சாட்டு
கொல்கத்தா அணியின் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் நேற்று அளித்த பேட்டியில், ஒரு சில ஆட்டங்களில் சரியான நேரத்தில் சரியான பவுலர்களை பயன்படுத்தி இருந்தால் வெற்றி பெற்றிருந்திருக்கலாம். நாங்கள் பேட்டிங்கில் தடுமாறுவதாக சொல்கிறார்கள்.
கொல்கத்தா,

கொல்கத்தா அணியின் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் நேற்று அளித்த பேட்டியில், ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சிறந்த அணி தான். ஆனால் முடிவுகளை எடுப்பதில் தவறு செய்வதினால் தான் தொடர்ச்சியாக தோல்வி ஏற்படுகிறது. ஒரு சில ஆட்டங்களில் சரியான நேரத்தில் சரியான பவுலர்களை பயன்படுத்தி இருந்தால் வெற்றி பெற்றிருந்திருக்கலாம். நாங்கள் பேட்டிங்கில் தடுமாறுவதாக சொல்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பேட்டிங்கில் தடுமாற்றம் இல்லை.


ராஜஸ்தான் அணி பேட்டிங் வரிசையில் பலவீனமான அணி. 175 ரன்கள் எடுத்தும் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றம் அளித்தது. எங்களது பந்து வீச்சை கொண்டு அவர்களையே இந்த ரன்னுக்குள் அடக்க முடியவில்லை என்றால், மும்பை போன்ற பலம் வாய்ந்த அணியை அதிசயம் நிகழ்த்தினால் மட்டுமே சாய்க்க முடியும். அணிக்குள் ஆரோக்கியமான சூழல் இல்லாததால் தோல்விக்கு பிறகு கடந்த இரு தினங்களாக அறைக்குள்ளேயே முடங்கி கிடக்கிறேன்’ என்றார்.