கிரிக்கெட்

பெங்களூரு கேப்டன் கோலி சொல்வது என்ன? + "||" + What does Bangalore captain Kohli say?

பெங்களூரு கேப்டன் கோலி சொல்வது என்ன?

பெங்களூரு கேப்டன் கோலி சொல்வது என்ன?
பெங்களூரு அணியின் கேப்டன் கோலி தோல்விக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடர்ச்சியாக 3-வது ஆண்டாக முதல் சுற்றுடன் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் நிலையில் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ வெல்வது முக்கியமானதாக இருந்தது. டாசை இழந்த போதிலும் எங்களது பவுலர்கள் பந்து வீசிய விதம் நன்றாகத்தான் இருந்தது. இந்த ஆடுகளத்தில் எதிரணியிடம் 3 தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ள நிலையில் 188 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடிப்பது கடினமாகத்தான் இருக்கும் என்பது தெரியும். 160 முதல் 165 ரன்கள் இலக்கு என்றால் வாய்ப்பு இருந்திருக்கும். முக்கியமான தருணத்தில் எங்களை விட டெல்லி அணியினர் சிறப்பாக செயல்பட்டனர். இனி மற்ற விஷயங்களை பற்றி கவலைப்படாமல் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் ஜாலியாக ஆடுவோம். 2 ஆட்டம் முடிந்ததும் அடுத்து என்ன நடக்கிறது என்பதை கவனிப்போம்’ என்றார். இந்த தொடரில் கோலி 12 ஆட்டங்களில் 9-ல் டாஸ் தோற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. டி வில்லியர்சுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய கோலி, யுவராஜ் சிங்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான டி வில்லியர்சுக்கு கோலி, யுவராஜ்சிங் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
2. சச்சின், லாரா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி..!
கிரிக்கெட் உலகில் பல வியத்தகு சாதனைகளை படைத்து வரும் விராட் கோலி, மற்றொரு சாதனையை படைக்க உள்ளார்.
3. ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு
ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிக்கிறார்கள்.