கிரிக்கெட்

மனைவியை கவர அதிரடியாக ஆடுகிறேன் - ரஸ்செல் ருசிகரம் + "||" + Attract the wife Action playing - Russell

மனைவியை கவர அதிரடியாக ஆடுகிறேன் - ரஸ்செல் ருசிகரம்

மனைவியை கவர அதிரடியாக ஆடுகிறேன் - ரஸ்செல் ருசிகரம்
மனைவியை கவருவதற்காக, தான் அதிரடியாக ஆடுவதாக ரஸ்செல் தெரிவித்தார்.
கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்ற ஆந்த்ரே ரஸ்செல் நள்ளிரவில் தனது 31-வது பிறந்த நாளை மனைவி ஜாசிம் லோராவுடன் கொண்டாடினார். அவரிடம் ஜாசிம் லோரா ஜாலியாக பேட்டி கண்டார். அப்போது ரஸ்செல் கூறுகையில், ‘இன்றைய இரவு எனக்கு சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த வெற்றி எனக்கு பிறந்த நாள் பரிசு. ஒவ்வொரு ஆட்டத்திலும் ரசிகர்களை குதூகலப்படுத்த வேண்டும் என்றும், எனது அழகான மனைவியை கவர்ந்திழுக்க வேண்டும் என்றும் அதிரடியாக ஆட விரும்புவேன். அதனால் எனக்கு எப்பொழுதும் நெருக்கடி இருப்பதாக உணர்வேன்’ என்றார். ரஸ்செலின் மனைவி ஜாசிம் கூறுகையில், ரஸ்செலின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவரிடம் இருந்து இந்த மாதிரியான பேட்டிங்கை எதிர்பார்த்தேன். ஏனெனில் இந்த சீசனில் உள்ளூரில் (கொல்கத்தா) நடந்த கடைசி ஆட்டம் இதுவாகும். அவர் பந்தை சிக்சருக்கு விரட்டியபோதெல்லாம் என்னை அறியாமலேயே உணர்ச்சிவசப்பட்டு உற்சாகத்தில் திளைத்தேன்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் மனைவி உள்பட 3 பேர் மீது தீ வைத்து கொளுத்தி விட்டு இளைஞர் தற்கொலை
கேரளாவில் மனைவி உள்பட குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் மீது தீ வைத்து கொளுத்தி விட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
2. மனைவியை எரித்துக் கொன்ற கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - வேலூர் கோர்ட்டு தீர்ப்பு
மனைவியை எரித்துக் கொன்ற கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
3. கும்பகோணத்தில் பரிதாபம்: கணவன்-மனைவி தற்கொலை
கும்பகோணத்தில், குடும்ப தகராறில் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
4. மனைவி, மாமியாரை வெட்டிக் கொன்ற தொழிலாளி கைது
உத்தமபாளையம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி, மாமியாரை கூலித்தொழிலாளி வெட்டி கொலை செய்தார்.
5. மகளை காதலித்து குடும்பத்தை பிரித்த வாலிபருக்கு கத்திக்குத்து; மீனவர் உள்பட 2 பேர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு
மகளை காதலித்து குடும்பத்தை பிரித்த வாலிபரை கத்தியால் குத்திய சம்பவத்தில் மீனவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை பேலீசார் தேடி வருகின்றனர்.