கிரிக்கெட்

அடுத்த சுற்று வாய்ப்பில் ராஜஸ்தான் நீடிக்குமா? - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல் + "||" + Will Rajasthan stay in the next round? - Bangalore Royal Challengers-Rajasthan Royals Confrontation Today

அடுத்த சுற்று வாய்ப்பில் ராஜஸ்தான் நீடிக்குமா? - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்

அடுத்த சுற்று வாய்ப்பில் ராஜஸ்தான் நீடிக்குமா? - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோத உள்ளன.
பெங்களூரு,

பெங்களூரு அணி 12 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 8 தோல்வியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. டெல்லிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம் பெங்களூரு அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது. எனவே எஞ்சிய ஆட்டங்களில் நெருக்கடி இல்லாமல் ஆடி ரசிகர்களுக்கு விருந்து படைக்க முயற்சிப்போம் என்று அந்த அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்து இருந்தார். இதனால் பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் அதிரடி காட்டுவதுடன், முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் கண்டு இருந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.

ராஜஸ்தான் அணி 12 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்களிலும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். அத்துடன் அடுத்த சுற்றுக்குள் நுழைய மற்ற அணிகளின் ஆட்ட முடிவும் அந்த அணிக்கு சாதகமாக அமைய வேண்டியது அவசியமானதாகும். இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்திதால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கி விடும். இதனால் அந்த அணிக்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. ஸ்டீவன் சுமித்துக்கு இது தான் கடைசி ஆட்டமாகும். இந்த ஆட்டம் முடிந்ததும் அவர் சொந்த நாட்டுக்கு (ஆஸ்திரேலியா) திரும்ப உள்ளார். இதனால் அவர் தான் சொல்லியபடி இந்த ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க முனைப்பு காட்டுவார். முந்தைய லீக் ஆட்டங்களில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்திய நம்பிக்கையுடன் ராஜஸ்தான் அணி இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது. இரு அணிகளிலும் சிறந்த வீரர்கள் அங்கம் வகிப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.