கிரிக்கெட்

54 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கிரிக்கெட் போட்டி - சென்னையில் இன்று தொடக்கம் + "||" + The All India cricket tournament involving 54 teams - starting today in Chennai

54 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கிரிக்கெட் போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்

54 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கிரிக்கெட் போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்
54 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கிரிக்கெட் போட்டி, சென்னையில் இன்று தொடங்க உள்ளது.
சென்னை,

யங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 50-வது அகில இந்திய கிரிக்கெட் போட்டி சென்னை காந்தி நகர் கிளப் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. ஜூன் 16-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஐ.ஓ.சி. (மும்பை), இந்தியா சிமெண்ட்ஸ், மத்திய கலால் வரி, ஏ.ஜி.எஸ். உள்பட 54 அணிகள் கலந்து கொள்கின்றன. 30 ஓவர் கொண்ட இந்த போட்டி நாக்-அவுட் மற்றும் சூப்பர் லீக் முறையில் நடைபெறுகிறது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.25 ஆயிரமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.15 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படுகிறது. இது தவிர பல்வேறு சிறந்த வீரர் விருதுகள் அளிக்கப்படுகிறது. போட்டியை இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் வி.வி.குமார் தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை யங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் செயலாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.