கிரிக்கெட்

உலக கோப்பையில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் தெண்டுல்கர் கணிப்பு + "||" + In the World Cup For batsmen The pitches will be positive Tendulkar forecast

உலக கோப்பையில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் தெண்டுல்கர் கணிப்பு

உலக கோப்பையில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் தெண்டுல்கர் கணிப்பு
10 அணிகள் பங்கேற்கும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.
மும்பை,

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் உலக கோப்பை குறித்து கூறியதாவது:-

உலக கோப்பை நடக்கும் சமயம் இங்கிலாந்தில் வெயில் காலமாகும். ஆடுகளத்தில் வெயில் நன்கு அடிக்கும் போது பேட்டிங்குக்கு உகந்த வகையில் மாறி விடும். நிச்சயம் பேட்ஸ்மேன்களுக்கு ஏதுவான அழகான ஆடுகளங்களையே அவர்கள் (போட்டி அமைப்பாளர்கள்) தருவார்கள். ஒருவேளை மேகமூட்டமான சீதோஷ்ண நிலை உருவானால், பந்து கொஞ்சம் ஸ்விங் ஆக வாய்ப்பு உண்டு. ஆனால் இத்தகைய சூழல் நீண்ட நேரம் நீடிக்க வாய்ப்பில்லை. விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் உள்ளிட்டோர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். எந்த ஒரு வடிவிலான போட்டி என்றாலும் நன்றாக செயல்பட்டால் அது நல்ல விஷயம் தான். ஏனெனில் அது வீரர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். நம்பிக்கையுடன் இருப்பது மிகவும் முக்கியம்.


இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.