கிரிக்கெட்

‘டோனி களத்தில் இருந்தால் எதிரணிக்கு நெருக்கடி தான்’ - ரெய்னா + "||" + If Dhoni is on the field Opposition The crisis is Raina

‘டோனி களத்தில் இருந்தால் எதிரணிக்கு நெருக்கடி தான்’ - ரெய்னா

‘டோனி களத்தில் இருந்தால் எதிரணிக்கு நெருக்கடி தான்’ - ரெய்னா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா நிருபர்களிடம் கூறினார்.
ஐ.பி.எல்.-ல் 100 கேட்ச் செய்த முதல் பீல்டர் என்ற சிறப்பை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா நிருபர்களிடம் கூறுகையில், ‘டோனி இல்லாத போது சென்னை அணியை வழிநடத்துவது எந்த அளவுக்கு சவாலாக இருந்தது என்று கேட்கிறீர்கள். ஒரு கேப்டனாக அவரை இழப்பது பிரச்சினை அல்ல.

ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக அவரை தவற விடும் போது மிகவும் கடினமாகி விடுகிறது. அதை நீங்கள் ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தின் போது பார்த்து இருப்பீர்கள். அவர் களம் இறங்கும் போது எதிரணிக்கு நிறைய நெருக்கடி உருவாகி விடுகிறது.

அதே நேரத்தில் அவர் அணியில் இல்லாத போது ஆட்டம் வேறு விதமாக மாறி விடுகிறது. அவர் விரும்பும் வரை தொடர்ந்து சென்னை அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும்’ என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...