கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி + "||" + IPL Cricket match: Bangalore team win by 4 wickets

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றிபெற்றது. #IPL2019 #SRHvRCB
பெங்களூரு,

விராட்கோலி தலைமையிலான  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 54-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது.

ஐதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மாவுக்கு பதிலாக யூசுப் பதான் சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் மூன்று மாற்றமாக ஸ்டோனிஸ், பவான் நெகி, கிளாசென் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஹெட்மயர், கிரான்ட்ஹோம், வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்தனர்.

டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சைத் தேர்வு  செய்தது. இதன்படி ஐதராபாத் அணியின் சார்பில் விரிதிமான் சகா, குப்தில் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் சகா 20(11) ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து குப்தில் 30(23) ரன்களும், மணீஷ் பாண்டே 9(12) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக கேப்டன் கேன் வில்லியம்சன், விஐய் சங்கர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அதிரடியாக ரன் சேர்த்த விஐய் சங்கர் 27(18) ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய யூசுப் பதான் 3(4) ரன்னும், முகமது நபி 4(3) ரன்னும், ரஷித் கான்  1(2) ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் அதிரடியாக ஆடிய கேன் வில்லியம்சன் 70(43) ரன்களும், புவனேஷ்வர் குமார் 7(5) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்தது. பெங்களூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளும்,  யுஸ்வேந்திர சாஹல் மற்றும் கெஜ்ரோலியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் பெங்களூர் அணிக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களுர் அணியின் சார்பில் பார்தீவ் பட்டேல், கேப்டன் விராட் கோலி ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் பார்தீவ் பட்டேல் (0) ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து விராட் கோலி 16(7) ரன்களும், டி வில்லியர்ஸ் 1(2) ரன்னும் எடுத்திருந்தநிலையில் அடுத்தடுத்து கேட்ச் ஆகி ஆட்டமிழந்தனர். அடுத்ததாக ஹெட்மயர், குர்கீரத் சிங் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதில் அதிரடி காட்டிய ஹெட்மயர் 32 பந்துகளில் தனது அரைசத்தினை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடியால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. அடுத்ததாக அந்த ஜோடியில் குர்கீரத் சிங் 39 பந்துகளில் தனது அரை சதத்தினை பதிவு செய்தார். அதிரடி காட்டிக் கொண்டிருந்த ஹெட்மயர் 75(47) ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து குர்கீரத் சிங் 65(48) ரன்களிலும், அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து  வெளியேறினார்.

இறுதியில்  உமேஷ் யாதவ் 9(4) ரன்களும், கிராண்ட் ஹோம் 3(4) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பெங்களூர் அணி 19.2 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக கலில் அகமது 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளும், ரஷித் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிபெற்றது.

ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பெங்களூருவுக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. 8-வது தோல்வியை தழுவிய ஐதராபாத் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு சிக்கலாகி விட்டது. மும்பைக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தால் மட்டுமே ஐதராபாத் அணிக்கு வாய்ப்பு உருவாகும்.