தெண்டுல்கரின் பேட்டால் உலக சாதனை படைத்தேன் - அப்ரிடி ருசிகர தகவல்


தெண்டுல்கரின் பேட்டால் உலக சாதனை படைத்தேன் - அப்ரிடி ருசிகர தகவல்
x
தினத்தந்தி 5 May 2019 11:00 PM GMT (Updated: 5 May 2019 8:01 PM GMT)

தெண்டுல்கரின் பேட்டால் உலக சாதனை படைத்ததாக அப்ரிடி தகவல் தெரிவித்துள்ளார்.

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி 1996-ம் ஆண்டு நைரோபியில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 37 பந்துகளில் சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். அந்த சாதனை படைப்பதற்கு தெண்டுல்கரின் பேட் உதவியதாக ருசிகர தகவலை அப்ரிடி இப்போது வெளியிட்டுள்ளார். அவர் தனது சுயசரிதை புத்தகத்தில், ‘பாகிஸ்தானின் வக்கார் யூனிசின் ஆசைப்படி சச்சின் தெண்டுல்கர் தனக்கு பிடித்தமான ஒரு பேட்டை அவரிடம் வழங்கியுள்ளார். சியல்கோட்டில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு கொண்டு சென்று அதே போன்று ஒரு பேட்டை செய்து கொள்ளுங்கள் என்று தெண்டுல்கர் கூறியிருக்கிறார். ஆனால் வக்கார் யூனிசோ அந்த பேட்டை என்னிடம் வழங்கினார். அந்த பேட்டை கொண்டு தான் 37 பந்துகளில் செஞ்சுரி போட்டு உலக சாதனை படைத்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அளித்த ஒரு பேட்டியில், ‘அப்ரிடி தனது புத்தகத்தை விற்பதற்காக அதில் கண்டபடி எழுதியுள்ளார். அவருக்கு வயது இப்போது 39 ஆக இருக்கலாம். ஆனால் மனரீதியாக அவர் 16 வயது சிறுவன் போல் இருக்கிறார்’ என்று சாடியிருக்கிறார்.

Next Story